JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS
அரசியலுக்கு BYE சொன்ன கவுதம் கம்பீர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்.பியான கவுதம் கம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிறகு கிரிக்கெட் தொடர்பான பணிகளில் தொடர்ந்து ஈடுபட போவதாக குறிப்பிட்டு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசியலில் இருந்து விலகிய கவுதம் கம்பீர்:
இந்த நிலையில் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகின. இதன் அடிப்படையில்
திருமணத்திற்காக உருவாக்கப்பட்ட விமான நிலையம் ! சர்வதேச அந்தஸ்த்து வழங்கிய மத்திய அரசு – விழாவில் பங்கேற்ற முக்கிய பிரபலங்கள் !
இதன் அடிப்படையில் தனது x சமூக வலைதளப்பக்கத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்,
முழு நேர அரசியல் பணிகளில் இருந்து விலகுவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இதன் மூலம் என்னால் கிரிக்கெட் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த முடியம். மேலும் மக்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஜெய்ஹிந்த் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ஐபில் போட்டியில் KKR அணியின் பயிற்ச்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.