பாஜகாவை தொடர்ந்து அதிமுகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காயத்ரி ரகுராம். ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. இதனால் அவர் தனது கவனத்தை நடனம் பக்கம் திருப்பினார். முன்னணி பிரபலங்கள் படத்திற்கு நடன இயக்குனராக இருந்துள்ளார். அதிலும் அவருக்கு வாய்ப்புகள் நழுவ சினிமாவை விட்டு விலகி சின்னத்திரை பக்கம் சென்றார். குறிப்பாக விஜய் டிவியில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு மீண்டும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை எடுத்து கொண்டார்.
அதிமுகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம்?.., வெளியான பரபரப்பு அறிக்கை!!
இதனை தொடர்ந்து அரசியல் மீது அவருக்கு அதிக நாட்டம் இருந்ததால், பாஜகவில் இணைந்து கட்சி பணியை மேற்கொண்டு வந்தார். பாஜக மாநில தலைவராக வந்த அண்ணாமலைக்கும் அவருக்கும் சில கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த கட்சி பதவியில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார். இதையடுத்து, அதிமுகவில் சேர்ந்த காயத்ரி ரகுராமிற்கு மகளிர் அணி துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அந்த கட்சியில் இருந்து கொண்டே பாஜக கட்சி குறித்தும் அண்ணாமலை குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை?.., எங்கெல்லாம் தெரியுமா?.., முழு விவரம் உள்ளே!!
இதனை தொடர்ந்து சமீபத்தில் அண்ணா பல்கலைகழக மாணவிக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதில், காயத்ரி ரகுராமும் பங்கேற்றார். அப்போது மேடையில் மகளிர் அணி நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காயத்ரி ரகுராம் வெளியேறி சென்றார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம் என அதிமுக லெட்டர் பேடில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறான அறிக்கை என்றும், இதை பாஜகவினர் தான் பரப்பி வருகிறார்கள் என்று கூறி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025- பரிசுப் பொருட்கள் என்னென்ன தெரியுமா?
இந்தி நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.., வீட்டுக்குள் புகுந்து அட்டாக் செய்த நபர்!!
இஸ்ரோவின் “ஸ்பேடெக்ஸ்” திட்டம் வெற்றி- 4வது இடத்தை பிடித்த இந்தியா!!
“Helmet” அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை.., அரசின் புதிய உத்தரவு!!