Breaking news : காசாவில் 21 ஆயிரம் குழந்தை மாயம்: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. தற்போது வரை இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் மட்டும் கிட்டத்தட்ட 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உலக நாடுகள் போரை நிறுத்தும்படி வலியுறுத்தி வருகின்றன. மேலும் இந்த தொடர்பாக ஐநா-வும் கவலை அளித்த போதிலும், எதற்கும் செவி சாய்க்காமல் இருந்து வருகிறது இஸ்ரேல்.
காசாவில் 21 ஆயிரம் குழந்தை மாயம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இந்நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக மனித உரிமை ஆர்வலர் அலெஸ்சான்ரா சையே ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது காசாவில் இருந்து கிட்டத்தட்ட 21 ஆயிரம் சிறுவர்கள் காணாமல் போயிருப்பதாக தெரியவந்துள்ளது. அப்படி மாயமானவர்களில் பல பேர் இஸ்ரேல் தாக்கிய போது கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி இறந்திருப்பதாகவும், மேலும் பல சிறுவர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று புதைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் காணாமல் போன சிறுவர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்களை பிரிந்து தவித்து வருவதால் அவர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. gaza israel war news – indian news in tamil – war latest news – gaza death information – missing case
Also Read: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் – சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
மினி பஸ் திட்டம் 2024 – புதிய வரைவு அறிக்கை வெளியீடு
Airtel Recharge Hike : ஜூலை 3 முதல் ஏர்டெல் ரீச்சார்ஜ் விலை உயர்வு
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.06.2024)
கர்நாடகாவில் மின்னலில் இருந்து நூலிழையில் தப்பிய சிறுமி