முதுமை தோற்றத்திற்கு மாறும் 2K கிட்ஸ்முதுமை தோற்றத்திற்கு மாறும் 2K கிட்ஸ்

முதுமை தோற்றத்திற்கு மாறும் 2K கிட்ஸ். Gen -Z தலைமுறையினர் என்று சொல்லப்படும் 1997-2012 ம் ஆண்டுக்குள் பிறந்த இளைஞர்கள் சீக்கிரமே வயதான தோற்றத்தை பெறுவதாக தற்போது நடத்திய மருத்துவ ஆய்வில் அதிர்ச்சியான விஷயம் வெளியே வந்துள்ளது. அதை பற்றிய மேலும் தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பிரபலமான ஜோர்டான் ஹெவிலக் என்பவர் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் நானும் எனது அம்மாவும் வெளியே செல்லும்போது நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை என நினைத்து கொள்வதாகவும் , 26 வயதான என்னை 40 வயது என நினைத்து கொள்கின்றனர் என்றும் கூறி தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். இதை பார்த்த பல Gen -Z இளைஞர்கள் தங்களுக்கும் இதே நிலைமை தான் என்று கூறி அந்த வீடியோ வை பகிர்ந்துள்ளனர்.

முதுமை தோற்றத்திற்கு மாறும் 2K கிட்ஸ்

1981- 96 ம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள் மில்லேனியல்ஸ் என்றும் 1997- 2012 க்குள் பிறந்தவர்கள் Gen -Z தலைமுறையினர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆனால் இந்த மில்லேனியல்ஸ் களை காட்டிலும் Gen -Z இளைஞர்கள் இளமையிலே வயது முதிர்ச்சியான தோற்றத்தை அடைந்து விடுகின்றனர். இதற்கு காரணம் இளம் தலைமுறையினரின் வாழ்க்கை முறை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த Gen -Z இளம் தலைமுறையினர் எப்போதும் மன அழுத்தத்துடன் வாழ்வதால் அவர்களது செரிமான திறன் பாதிக்கப்பட்டு விரைவிலே அவர்களது தோல் சுருக்கம் விழ ஆரம்பித்து விடுகிறது. மேலும் கண்களுக்கு அருகே சுருக்கம், வெள்ளை முடி, உடல்பருமன் , சோர்வு ஆகியவையும் வந்து விடுகிறது. இளைஞர்கள் மீதான எதிர்பார்ப்பு, வெற்றியை நோக்கிய பயணம், தாழ்வு மனப்பான்மை போன்றவற்றால் அவர்கள் கடுமையாக பாதிக்க படுகின்றனர்.

பொதுத்தேர்வு மாணவர்களே., இத மட்டும் செஞ்சிடாதீங்க., செஞ்சா 10 ஆண்டு ஜெயில் தான்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!

சமூக வலைத்தளங்களும் இதற்கு பெரும் காரணமாக உள்ளது. குழந்தைகள் கூட பெரியவர்கள் போல் நடந்து கொள்கின்றனர். ரீல்ஸ், tiktok போன்றவற்றில் கூட தன்னை பெரிய மனிதனாக காட்டிக்கொள்ளவேண்டும் என்று முற்படுகின்றனர். மேலும் தற்போது அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி கொள்வதும் அதிகமாகி விட்டது. அதில் influencer களின் உந்துதலின் பேரில் முகத்திற்கு தேவையற்ற பல கிரீம் களை பயன்படுத்துகின்றனர்.இது சீக்கிரமே நமது தோலை பாதிக்க தொடங்கி விடும்.

தற்போது பள்ளி பருவத்திலே கம்ப்யூட்டர் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது. மேலும் எப்போதும் கம்ப்யூட்டர் முன்னே உக்கார்ந்து வேலை செய்வதால் அவர்களுக்கு கண் கருவளையம், தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகள் வருகிறது, இவர்களின் உணவு முறையும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடுவது, பாஸ்ட் புட் , ஜங்க் புட் அதிகம் எடுத்து கொள்வது, இதனுடன் மது அருந்துதல், புகை பிடிப்பது போன்ற பழக்க வழக்கங்களாலும் அவர்களது உடல் மாறுபாட்டை அடைகிறது.

JOIN WHATSAPP GET INTERESTING NEWS UPDATE

அதனால் Gen -Z தலைமுறையினர் இந்த முறையற்ற வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும். தினமும் சிறிய உடற்பயிற்சி, ஆரோக்கியம் நிறைந்த சாப்பாடு, சரியான தூக்கம், மனஅழுத்தமின்மை போன்றவற்றை கடைபிடித்தாலே இந்த முதிர்ச்சியான தோற்றத்திலிருந்து தப்பித்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *