பிரிட்டனில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத்தேர்தல். பிரிட்டன் நாட்டை பொறுத்தவரையில் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அங்கு பொதுத் தேர்தல் நடத்த வேண்டும். அந்த வகையில் பிரதமர் ரிஷி சுனக் இந்த தேர்தலானது 2024 ஆம் ஆண்டு பிற்பகுதியில் நடைபெறும் என்று பலமுறை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் வெளியுறவு செயலர் டேவிட் கேமரூன் அல்பேனியா பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு அவரை நாடு திரும்பும் படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி தேர்தல் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகக்கூடும் என்று ஊடகங்கள் தெரிவிக்க ஆரம்பித்தன.
பிரிட்டனில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத்தேர்தல்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பிரிட்டன் தேர்தல் தேதி அறிவிப்பு :
பயணத்திலிருந்த நிலையில், திடீரென உடனே நாடு திரும்புமாறு அழைக்கப்பட்டார். இதனையடுத்து தேர்தல் தேதி அறிவிப்பிற்காக தான் இவ்வாறு பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஊடகங்களில் செய்திகள் கசிய தொடங்கின . இந்நிலையில் நேற்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கிழக்கு ஐரோப்பாவிற்கான பயணத்தை பிரதமர் திடீரென ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு ரிஷி சுனக் தேர்தல் தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
“கிங்” கான் மருத்துவமனையில் அனுமதி – அடக்கடவுளே.. ஷாருக்கானுக்கு என்ன தான் ஆச்சு? பாலிவுட்டில் பரபரப்பு!!
அந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் ரிஷி சுனக் பிரதமராக முதல் முறையாக வாக்காளர்களை நேரடியாக எதிர்கொள்ளப் போகின்ற தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.