“கில்லி” படத்தில் முதலில் நடிக்க இருந்த ஜோடியே வேற – வாய்ப்பை நழுவ விட்ட அந்த தூள் ஜோடி யார் தெரியுமா?

“கில்லி” படத்தில் முதலில் நடிக்க இருந்த ஜோடியே வேற: தற்போதைய திரையுலகில் சமீப காலமாக சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரீ ரிலீசுக்காக ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் கில்லி தான். தளபதி விஜய், திரிஷா ஜோடியாக நடித்த இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 20ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த ஜோடி வேறையாம். கில்லி படத்தை இயக்கிய தரணி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இதை பற்றி கூறியுள்ளார். அதாவது, தரணி கில்லி படத்தின் கதையை முதலில் விக்ரமுக்கு தான் கூறியுள்ளார். அவருடன் தில், தூள் என வரிசையாக இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்ததால் கில்லி படத்தின் கதையும் கூறியுள்ளார்.

"கில்லி" படத்தில் முதலில் நடிக்க இருந்த ஜோடியே வேற
“கில்லி” படத்தில் முதலில் நடிக்க இருந்த ஜோடியே வேற

அதே போல் த்ரிஷாவுக்கு முன்னர் ஜோதிகாவை இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அவர்கள் இருவரும் வேறு படத்தில் பிஸியாக இருந்ததால், இப்படத்தின் கதையை விஜயிடம் கூறி இப்படி ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார் தரணி. ஒருவேளை இப்படத்தில் விக்ரம் நடித்திருந்தால் இந்த அளவுக்கு ஹிட் அடித்திருக்குமா என்றால் அது சந்தேகம் தான். 

Leave a Comment