
கடந்த சில வருடங்களாக கலப்பு திருமணம் செய்து கொண்ட காதலன் காதலியின் பெற்றோர்கள் ஆணவ கொலை செய்யும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே கலப்பு திருமணம் செய்த இளம்பெண் ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே நவீன் என்பவரும், அதே பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரும் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், ஐஸ்வர்யாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!

இதனால் இருவரும் ஓடி போய் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் தங்கி வந்துள்ளனர். இதை தெரிந்து கொண்ட பெண் வீட்டார், அந்த பெண்ணை அழைத்து சென்று கொடுமைப்படுத்தி வீட்டிலேயே வைத்து எரித்து ஆணவ கொலை செய்துள்ளனர். இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து பெண் வீட்டார் உறுப்பினர்களைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது காதலன் ஒரு பட்டியலின சாதியை சேர்ந்தவன் என்பதால் தான் கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.