தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பணிப்பெண் மகள் புகார்
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பணிப்பெண் மகள் புகார்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஞானவேல் ராஜா மனைவி மேகாவின் தங்க நகைகள் காணவில்லை என்றும், அதற்கு அவர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்த லட்சுமி என்பவர் காரணம் என்று காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை செய்த போது தான் நகையை திருடவில்லை என்று பலமுறை கூறியும் தொடர்ந்து போலீஸ் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லட்சுமி சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
பின்னர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் தனது அம்மா தற்கொலைக்கு தூண்டியதாக லட்சுமியின் மகள் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், ” காவல்துறை விசாரணை என்ற பெயரில் என்னுடைய அம்மாவை சித்திரவதை செய்ததால் தான், அவருக்கு ஏற்பட்ட மன வேதனை ஏற்பட்டதால் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார் என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் கவலைக்கிடம் – “மெனாய் பாலம்” என்ற பெயரில் இறுதி சடங்கு ஏற்பாடு?