விஜய்யின் GOAT திரைப்படம் OTT யில் வெளியீடு - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு !விஜய்யின் GOAT திரைப்படம் OTT யில் வெளியீடு - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு !

தற்போது நடிகர் விஜய்யின் GOAT திரைப்படம் OTT யில் வெளியீடு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் அக்டோபர் 3 ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தி கோட் திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவான GOAT திரைப்படம் கடந்த 5 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்தனர். அத்துடன் GOAT திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் GOAT திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சுமார் 440 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. GOAT Released On Netflix OTT From 3rd October 2024

ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி – என்ன ஆனது? முதல்வர் போட்ட பதிவு!

இந்நிலையில் GOAT திரைப்படத்தின் OTT உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வரும் அக்டோபர் 3 ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தி கோட் திரைப்படம் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *