நாட்டின் பல்வேறு பகுதிகளில் பானிபூரி பல்வேறு வகைகளில் விற்கப்பட்டு வரும் நிலையில், அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் புதிய பானி பூரி வகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தங்கத்தட்டில் பரிமாறப்படும் புதிய வகை பானிபூரி
இன்றைய காலகட்டத்தில் தெருவோரம் விற்கப்படும் உணவு பொருட்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த உணவு தான் பானிபூரி. அதுமட்டுமின்றி பானிபூரி பல்வேறு வகைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ஒரு தெரு உணவக விற்பனையாளர் ஒருவர் புதிய வகை பானிபூரி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோவும் வெளியாக இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில், தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளி படலத்துடன் பரிமாறப்படும் பானி பூரியுடன் துருவிய பாதாம் மற்றும் தண்டாய் ஆகிய கலவை சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 பானிபூரி இருக்கிறது. அதுமட்டுமின்றி இதில் இருக்கும் ஒவ்வொரு பானிபூரியிலும் பாதாம் மற்றும் சில முழு முந்திரி, பிஸ்தா போன்றவைகளை துண்டாக்கப்பட்டு மேலப்புல தூவபட்டுள்ளது. குறிப்பாக தாராளமாக தேனை சேர்த்து அவற்றை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது போல காட்சிகள் உள்ளன. தற்போது இந்த வீடியோ பானிபூரி பிரியர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.