Gold Rate Today: தங்கம் விலை அதிரடி குறைவு: இல்லத்தரசிகளின் அதீத விரும்பிகளில் ஒன்று தான் தங்கம் ஆபரணங்கள். ஏழை முதல் பணக்கார பெண்கள் வரை தங்கம் வாங்க அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். இப்படி இருக்கையில் கடந்த மே மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஜூன் தொடங்கிய முதல் வாரத்திலேயே தங்கம் விலை குறைந்து காணப்பட்டுள்ளது. அதாவது நேற்று வரை விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் இருந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்து விலை பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி இன்று 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து ரூ.5,460-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.288 குறைந்து ரூ.43,680-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.6,666-க்கும், பவுனுக்கு ரூ.352 குறைந்து ஒரு பவுன் ரூ.53,328-க்கும் விற்பனையாகி வருகிறது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 70 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.97.30-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.97.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கூட்டம் நகை கடைகளில் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதம் தங்க விலை விவரம் உள்ளே