வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை (11.04.2025)! முழு விவரம் இதோ!
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. அந்த வகையில் கடந்த 3 ம் தேதி வரை தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், மேலும் அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480 க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read: ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? – முழு விவரம் இதோ!
மேலும் அதன் பின்னரும் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை கொடுத்த நிலை மாறி, மறுநாளில் இருந்து தங்கம் விலை மளமளவென சரியத் தொடங்கியது. இதன் அடிப்படையில், தங்கம் விலை கடந்த 4 ந்தேதியில் இருந்து 8 ந்தேதி வரையிலான 5 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.335-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 680-ம் அதிரடியாக குறைந்து குறிப்பிடத்தக்கது.
உச்சம் தொட்ட தங்கம் விலை:
இந்நிலையில், இன்றும் மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 185 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,745-க்கும் சவரனுக்கு 1485 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960 க்கும் விற்பனையாகிறது. இதன் அடிப்படையில் 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,160 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.