மகளிர் உரிமை தொகையை உயர்த்தும் அரசு. வரவிருக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமை தொகையான 1000 ரூபாயை உயர்த்த ஆளுங்கட்சி தி.மு.க அரசு திட்டமிட்டு கொண்டிருப்பதாக செய்தி பரவி கொண்டிருக்கிறது. உரிமை தொகையை 1000 லிருந்து 1500 ஆக உயர்த்த ஆலோசித்து வருகிறது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தி.மு.க அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக மீண்டும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்தனர். அதனை செயல்படுத்தியும் காட்டி விட்டனர்.
தேர்தலில் களமிறங்கும் முக்கிய பிரபலம்.., குஷ்புவை வைத்து காய் நகர்த்திய பாஜக கட்சி.., பின்னணி என்ன?
தற்போது மீண்டும் வரவிருக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்க ஆளும் கட்சி தி.மு.க அரசு திட்டமிட்டுவருகிறது. அதன்படி மகளிர் உரிமை தொகையாக வழங்கும் ரூ.1000 க்கு பதிலாக ரூ.1500 கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுக்க இந்த ஆளும் கட்சி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த தேர்தலுக்காக தி.மு.க அரசு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. மண்டல பொறுப்பாளர்கள் ஏற்கனவே நியமிக்க பட்டுவிட்டனர். அதே போல் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் தேர்தெடுக்கப்பட்டு நியமிக்க பட்டு விட்டனர். பூத் கமிட்டி சார்பாக வாக்காளர்களை சந்திக்கும் பணிகளை தி.மு.க தொடங்கி விட்டது.