சுந்தர் பிச்சை
உலகில் பல விஷயங்களை மாற்றி அமைத்த நிறுவனம் என்றால் அது கூகுள் என்று சொன்னால் மிகையாகாது. அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயலாற்றி வந்தவர் தான் சுந்தர் பிச்சை. கடந்த சில நாட்களாக AI தொழில்நுட்பம் (செயற்கை நுண்ணறிவு) சோசியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.புதுப்பிக்கப்பட்ட ஜெமினி AI உலகின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது. இந்த ஜெமினி AI பயன்படுத்தி சில தவறுகள் நடைபெற்று வருவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் இது முழுவதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடைபெற்றதாக கூகுள் நிறுவனம் சார்பாக கூறப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து இந்த தவறுகளை சரி செய்ய சுந்தர் பிச்சை முயற்சி செய்து வந்தார். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த செயலியை இடைநிறுத்தியது. இதனால் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குகள் சரிந்த நிலையில், உயர் பதவியில் இருந்து வரும் சுந்தர் பிச்சையை நீக்க அந்நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, முன்னாள் OpenAI ஆராய்ச்சியாளரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், கூகுளை தற்போதைய நிலையில் வைத்திருக்க தலைமை நிர்வாக அதிகாரி மாற்றம் தேவை என வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.