கூகுள் நிறுவனம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது: உலகின் பிரபல நிறுவனங்களான கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து 1.2 பில்லியன் டாலர் மதிப்பில் நுண்ணறிவு(ஏஐ), கிளவுட் தொழில்நுட்ப சேவையை தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இது மாதிரியான தொழில்நுட்பங்களை வழங்குவது நியாயமற்றது என்று கூறி கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக நியூயார்க், கலிபோர்னியாவில் இருக்கும் கூகுள் ஆபிஸில் ஊழியர்கள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் மீது கூகுள் புகார் அளித்த பேரில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கூகுள் நிறுவன சர்வதேச பாதுகாப்புப் பிரிவின் தலைவர் கிரிஸ் ராக்கோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ” கூகுள் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்ட 28 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே இதுபோன்ற செயல்பாடுகளை கூகுள் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.