நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு - கூகுள் மேப்ஸ் கொடுத்த அசத்தல் அப்டேட் !நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு - கூகுள் மேப்ஸ் கொடுத்த அசத்தல் அப்டேட் !

இந்நிலையில் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூகுள் மேப்ஸ் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இதனை போக்க தற்போது நான்குசக்கர வாகன ஓட்டிகள் குறுகலான மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளை தவிர்த்து அகலமான பாதையில் செல்வதற்கு வழிகாட்ட ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய அம்சத்தைச் கூகுள் மேப்ஸ் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த வகையில் இந்த வசதியில் மூலம் தெருவின் அமைப்பு, சாலையின் அகலம், கட்டிடங்களுக்கு இடையேயான தூரம் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த புதிய அப்டேட் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் குறுகலான பாதைகளை தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும். tech updates

அத்துடன் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் குறுகிய ரோடுகள் வழியாக எளிதாக செல்லவும் இந்த வசதி வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கோவை, இந்தூர், போபால், புவனேஸ்வர் மற்றும் குவஹாட்டி ஆகிய 8 நகரங்களில் இந்த புதிய அம்சங்கள் ஆன்ட்ராய்டு செல்போன்களில் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

அதன் பின்னர் இந்தியாவில் 40 நகரங்களில் வாகன ஓட்டிகள் செல்லும் சாலைகளில் மேம்பாலங்கள் உள்ளதை முன்கூட்டியே தெரிவிக்கும் புதிய அம்சமும் சேர்க்கப்படவுள்ளது.

மேலும் மின்சார வாகனங்கள் பயன்படுத்துவோருக்கு எங்கு சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன என்ற தகவல்களும் இடம் பெறவுள்ளது.

தற்போது இந்தியாவில் 8,000 சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் இருந்து சார்ஜிங் ஸ்டேஷன் உள்ள இடங்கள் பற்றிய தகவலை பெற்று அதன் விவரங்கள் கூகுள் மேப்ஸ்-ல் அப்டேட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.tech news in tamil

செப்டம்பர் 21ல் இலங்கை அதிபர் தேர்தல் – ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டி !

இதுபற்றி கூகுள் மேப்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கையில் நாங்கள் மற்ற நிறுவனங்களுடனான போட்டியில் கவனம் செலுத்துவதில்லை. மாறாக வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை மேம்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *