புதிய எச்சரிக்கை வாசகத்தை வெளியிட்ட கூகுள்புதிய எச்சரிக்கை வாசகத்தை வெளியிட்ட கூகுள்

கூகுள் க்ரோமில் incognito mode பயன்படுத்தும் பயனாளர்களுக்கு ” நீங்கள் கண்காணிக்க படுகிறீர்கள்” என்ற புதிய எச்சரிக்கை வாசகத்தை சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம்.

JOIN WHATSAPP GET VIRAL NEWS

கூகுள் பிரௌசர் பயன்படுத்தாதவர் யாரும் இருக்க முடியாது. படித்தவர் மட்டும் இல்லை படிக்காதவர்கள் கூட தற்போது இன்டர்நெட் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இன்டர்நெட் பயன்படுத்த மொழி ஒரு விஷயமே இல்லை. அவர் அவர் தாய் மொழிகளில் தற்போது அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இந்த இன்டர்நெட்டையும் பல முறைகேடான விஷயங்களுக்கு மக்கள் பயன்படுத்துகின்றனர். அப்படி அவர்கள் பயன்படுத்துவது மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்றும் பல தந்திரங்களை கையாளுகின்றனர். இந்த கூகுள் incognito mode ம் அப்படி தான். அப்படி என்ன இருக்கிறது இந்த incognito mode ல்.

சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் இரண்டாவது திருமணம் ! வைரல் புகைப்படம் உள்ளே !

நாம் பிரௌஸ் செய்யும் போது நாம் தேடும் தகவல் அனைத்தும் கூகிள் History ல் save ஆகும். ஆனால் நாம் இந்த கூகுள் incognito mode ஐ ஆன் செய்து பிரௌஸ் செய்தால் நமது data வை எவராலும் பார்க்க முடியாது. அது தற்காலிகமாக சேமிக்கப்பட்டு பின்னர் தானே அழிந்து விடும். ஆனால் நாம் பிரௌஸ் செய்யும் வரை நமது செயல்களை கிராக் செய்ய முடியும்.

இது கூகுள் மட்டுமில்லாமல் மற்ற இணையதளங்களிலும் இதே முறை தான். ஆனால் தற்சமயம் இந்த incognito mode ல் பயனர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. அதனால் கூகுள் நிறுவனம் “நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்” என்ற புதிய எச்சரிக்கை வாசகத்தை நடைமுறை கொண்டு வந்துள்ளது. இதில் கூகுள் மட்டுமில்லாமல் நாம் தேடும் மற்ற இணைய தளங்களும் சம்மந்த பட்டுள்ளதால் பயனாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *