Playstore-லிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 10 இந்திய App-கள்.., Google நிறுவனம் வைத்த செக்., என்ன காரணம் தெரியுமா?Playstore-லிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 10 இந்திய App-கள்.., Google நிறுவனம் வைத்த செக்., என்ன காரணம் தெரியுமா?

10 இந்திய App-கள்

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான ஆப்களை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தான் டவுன்லோடு செய்து வருகின்றனர். அப்படி கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பிடிக்க ஆப்பை தயாரித்த நிறுவனம் ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். இப்படி கட்டணம் செலுத்தவில்லை என்றால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்படும். அந்த வகையில் 10 பேமஸ் ஆப்களை கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, நீதிமன்றங்களோ, அல்லது விசாரணை அமைப்புகளோ கூகுள் நிறுவனம்  கட்டணம் வசூலிக்க தடை செய்யவில்லை. எனவே கூகுள் நிறுவனத்திற்கு கட்டணம் கட்ட தவறிய பிரபலமான 10 இந்திய நிறுவனங்களின் செயலிகள் நீக்கம் செய்வதாகவும், இந்த நிறுவனங்களுக்கு சுமார் 3 வருடங்களுக்கும் மேல் தவணை வழங்கினோம் என்றும் தெரிவித்துள்ளனர். அதன்படி ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளில், நவுக்ரி.காம் (naukri.com), நைன்டி நைன் ஏக்கர்ஸ்.காம் (99acres.com), பாரத்மேட்ரிமோனி.காம் (bharatmatrimony.com) மற்றும் ஷாதி.காம் (shaadi.com) உள்ளிட்டவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

‘சம வேலைக்கு சம ஊதியம்’ ., தொடரும் போராட்டம்.., தமிழக ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *