கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈ-மெயில் முகவரி தேவைப்படுகிறது. அதன்படி பெரும்பாலானவர்கள் கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை
குறிப்பாக உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் மக்கள் ஜிமெயில் கணக்கு தொடங்கி உள்ளனர். கடந்த சில நாட்களாக கூகுள் நிறுவனம் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. அதன்படி தற்போது கூகிள் தங்களுடைய சர்வரில் இட வசதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே இரண்டு ஆண்டுகளாக சேவையில் இல்லாத ஜிமெயில் கணக்குளை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. வருகிற செப்டம்பர் 20-ம் தேதியில் இருந்து தொடங்க இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read: டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!
மேலும் ஜிமெயில் நீக்கம் செய்யப்பட்டால் அந்த ஜிமெயில் உள்ள ஆவணங்கள், டிரைவ், மீட், காலண்டர், கூகுள் போட்டோஸ் என எல்லாமே நீக்கம் செய்யபடும். எனவே இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பயன்படுத்தாத ஜிமெயில் கணக்கில் இருந்து மின்னஞ்சலை(email) படிப்பது அல்லது மின்னஞ்சல் அனுப்புவது என ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!
திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி