
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டப்படிப்பு மாணவர்சேர்க்கை 2024. தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் இந்த கல்லூரிகளில் 1.07 லட்சம் பட்டப்படிப்பிற்கான இடங்கள் உள்ளன. தற்போது 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 6 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. 2 லட்சத்து 28 ஆயிரத்து 527 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டப்படிப்பு மாணவர்சேர்க்கை 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு :
இதையடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகின்றன.
கல்லூரிகள் மூலம் தரவரிசை பட்டியலில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு தேதி தொடர்பான முழு விவரங்களும் விவரங்களை ‘வாட்ஸ் அப்’ மூலம் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக நாளை (செவ்வாய்கிழமை) முதல் வருகிற 30ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகிய மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு தொடர்பான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அதன் பிறகு, அடுத்த மாதம் ஜூன் 10ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. 2 ஆம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு அடுத்த மாதம் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மோயர் பாயிண்ட் வனப்பகுதியில் சிக்கிய சுற்றுலா பயணிகள் – வனத்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலந்தாய்வில் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆணை பெற்ற மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற ஜூலை மாதம் 3 ஆம் தேதி தொடங்குகிறது என்று உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.