கிளம்பாக்கம் பேருந்துநிலையத்தில் திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்படாததால் மக்கள் அனைவரும் பெரும் கோபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தின் வெளியே சாலைமறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சமீபத்தில் கட்டப்பட்டது தான் இந்த கிளம்பாக்கம் பஸ்ஸ்டாண்ட். அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் செல்லும் என்று கூறியிருந்தனர். இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் திருச்சிக்கு செல்ல போதுமான பேருந்துகளை இல்லை எனவும், பலமணி நேரமாக காத்திருப்பதாகவும் கூறி மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் அனைத்தையும் சிறைபிடிக்க தொடங்கினர். பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் தனியேதங்க வைத்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கூடுதல்பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி மக்களை சமாதானபடுத்த முயற்சி எடுத்தனர். திருச்சி பேருந்துகள் மட்டுமில்லாமல் மதுரை போன்ற மற்ற மாவட்டங்களுக்கும் பேருந்துகள் போதுமான அளவில் இல்லை. சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து வெள்ளி அன்று இரவில் மட்டும் எப்போதும் பேருந்து நிலையம் நிரம்பி வழியும். பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து சொந்தஊருக்கு செல்ல இந்த பேருந்து நிலையம் தான் வர வேண்டியுள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கிளம்பாக்கம் பஸ்நிலையம் வருவதற்கும் உள்ளூர் பேருந்துகள் இல்லை எனவும் ஆட்டோ மற்றும் டாக்ஸியில் வருவதற்கும் பெரும் செலவு ஆவதாகவும் கூறிவேதனை தெரிவித்துள்ளனர்.