தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

தற்போது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதனால் சுமார் 2 .75 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவர். 20% வழங்கப்படும் என அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. government employees Diwali bonus

இதன் அடிப்படையில் 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை என மொத்தம் 20% வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிறுவனங்களுக்கான உபரித்தொகை கணக்கில் கொண்டு 8.33% மிகை ஊதியம், 11.67% கருணைத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்கள் 8932 ஆக அதிகரிப்பு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு !

இதனை தொடர்ந்து மின்துறையில் பணியாற்றும் C, D பிரிவு ஊழியர்களுக்கும் 20% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு வசதி வாரிய C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கும் 10% போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

இதன் மூலம் நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8400 முதல் ரூ.16800 வரை போனசாக கிடைக்கும். இதனால் சுமார் 2 .75 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *