
அரசு மருத்துவமனைகளில் இனி 3 ஷிப்ட்களாக பணி. தமிழ்நாட்டில் உள்ள மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறையின் கீழ் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களின் வேலை நேரத்தை தற்போது ஷிப்ட் மாற்றியமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் இனி 3 ஷிப்ட்களாக பணி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அரசு மருத்துவமனைகளில் மூன்று ஷிப்ட்களாக பணி :
தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரி மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 Shift Timing அடிப்படையில் பணி நேரத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை ! ரூ.100 கட்டணம் செலுத்தி அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் !
அந்த வகையில் காலை 6 மணி முதல் 1 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என மூன்று ஷிப்ட்களாக பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 50% பணியாளர்கள் முதல் ஷிப்ட்டிலும், 25% பணியாளர்கள் இரண்டாவது ஷிப்ட்டிலும், இரவு நேரத்தில் 25% பணியாளர்களும் பணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.