மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா: ஒப்புதல் அளித்த கவர்னர் ஆர்.என். ரவி!!மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா: ஒப்புதல் அளித்த கவர்னர் ஆர்.என். ரவி!!

Breaking News: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா: சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரங்கேறிய கள்ளச்சாராயம் குடித்து கிட்டத்தட்ட 60 பேருக்கு மேல் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது குறித்து பல்வேறு இடங்களில் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், கடந்த ஜூன் 29-ல் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா (தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937) தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அதில் இனிமேல் மதுவிலக்குச் சட்டத்தில் இருக்கும் பிரிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதோ அல்லது செல்லாதபடி செய்வதற்கு உடன்பாட்டாலோ ஓராண்டுக்கு குறையாத மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கும் சிறைத் தண்டனையும்,  ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவித்து இருந்தது.

Also Read: மதுரை சிறுவன் கடத்தல்‌ விவகாரம் – ஒருவரை அதிரடியாக கைது செய்த போலீஸ் –  என்ன நடந்தது?

இந்நிலையில்  மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழக சட்டப்பேரவையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *