
அரசு விரைவுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து
ஒரு அரசு விரைவுப் பேருந்து திருப்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு கிட்டத்தட்ட 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து சரியாக தாராபுரம் புறவழிச் சாலையில் போய் கொண்டிருந்த சமயத்தில் திடிரென இன்ஜினில் இருந்து புகை வெளியேறியுள்ளது. என்னவென்று தெரியாமல் டிரைவர் திகைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தீ பிடிக்க தொடங்கியது.
இதை சுதாரித்து கொண்ட, ஓட்டுநர் கணேசமூர்த்தி (55) மற்றும் நடத்துனர் சிகாமணி (60) உடனே பேருந்துக்குள் இருந்த 50 பயணிகளை துரிதமாக செயல்பட்டு கீழே இறக்கி விட்டுள்ளனர். வெறும் 10 நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து கருகியது. பயணிகளை கீழே இறக்கியதால் பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்க்க முடிந்தது.
Also Read: எல்லா கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற பிராவோ – கண் கலங்கி வெளியிட்ட வீடியோ!!
இதனை தொடர்ந்து தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2- மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் மாற்றுப் பேருந்து வரவழைக்கப்பட்டு அனைத்து பயணிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் சில மணி நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது?
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு