Home » செய்திகள் » தாய் தந்தையை இழந்த பேத்தி.., பாலியல் வன்கொடுமை செய்த தாத்தாமார்கள் – போக்சோ வழக்கு பதிவு!!

தாய் தந்தையை இழந்த பேத்தி.., பாலியல் வன்கொடுமை செய்த தாத்தாமார்கள் – போக்சோ வழக்கு பதிவு!!

தாய் தந்தையை இழந்த பேத்தி.., பாலியல் வன்கொடுமை செய்த தாத்தாமார்கள் - போக்சோ வழக்கு பதிவு!!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். மேலும் அந்த சிறுமிக்கு தாய், தந்தை இல்லாத காரணத்தினால்  அவரது தந்தை வழி தாத்தா மற்றும் பாட்டி வீட்டில் வசித்து வந்திருக்கிறாள். அதன் அடிப்படையில் அந்த சிறுமியின் சொந்த தாத்தா பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் சிறுமியின் சிறிய தாத்தாவும் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமி படிக்கும் பள்ளியில் சைல்டு லைன் மூலம் “நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்” குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்று உள்ளது. அப்போது அந்த சிறுமி தனக்கு நடந்த துயர சம்பவத்தை  அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் மூலம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, மேலும் அந்த சிறுமி  குழந்தைகள் காப்பகத்தில்  சேர்க்கப்பட்டாள்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைல்டு லைன் அதிகாரிகள் மூலம் புகார் அளிக்கப்பட்டது. அதிகாரிகள் புகார் அளித்ததின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இச்சம்பவத்தை தொடர்ந்து போலீசார்  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பேத்தியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட தாத்தா முனுசாமி மற்றும் சிறிய தாத்தா குமரேசன் ஆகிய இருவரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மாணவர்களே.., தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை.., முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top