தந்தை பெரியார் பிறந்தநாள் தவெக தலைவர் விஜய் வாழ்த்து - பெரியார் பாதையில் பயணிப்போம் என உறுதி !தந்தை பெரியார் பிறந்தநாள் தவெக தலைவர் விஜய் வாழ்த்து - பெரியார் பாதையில் பயணிப்போம் என உறுதி !

தற்போது தந்தை பெரியார் பிறந்தநாள் தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வகையில் பெரியார் காட்டிய பாதையில் பயணிப்போம் என உறுதி. tvk President Vijay

திராவிட கழக தலைவர் தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபையில் அறிவித்தார். அறிவிப்பின் படி ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று பெரியார் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த விழாவையொட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Periyar birthday

இதனை தொடர்ந்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தந்தை பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது, “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழ்நாடு மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர் தந்தை பெரியார், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தலைகளை அறுத்தெறிந்தவர் என்றும்,

பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து – முழு தகவல் இதோ !

அத்துடன் மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர், சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என்று தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார். Greetings from tvk President Vijay on the occasion of Periyar birthday

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *