புதுச்சேரி அரசின் சமூக நலத் துறை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு குழுக் காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
மாற்றுத் திறனாளி:
தமிழ்நாட்டில் வாழும் பொது மக்களின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நல்ல திட்டங்களை அமல் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது, புதுச்சேரி அரசின் சமூக நலத் துறை “மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்களுக்கான குழுக் காப்பீடு” திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் பணியில் இருக்கும் போது விபத்தில் மரணம் அடைந்தால், இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். அதன்படி நான்கு வகைகளாக காப்பீட்டு தொகை வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு – குழுக் காப்பீட்டுத் திட்டம்! எவ்வளவு பணம் கிடைக்கும்?
வகைகள்:
- குழு A: ₹ 1,20,000/-.
- குழு B: ₹ 60,000/-.
- குழு C: ₹ 30,000/-.
- குழு D: ₹ 15,000/-.
விண்ணப்பிக்க தகுதிகள்:
- விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை வசிப்பவராக இருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர் 40% அல்லது அதற்கு மேல் உடல் ஊனமுற்றவராக இருக்க வேண்டும்.
- குறிப்பாக விண்ணப்பதாரர் அரசு பணியாளராக இருக்க வேண்டும்.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம்: பெண்களுக்கு வட்டி மட்டும் ரூ.60,000!
விண்ணப்பிப்பது எப்படி?
- இதில் விண்ணப்பிக்க நினைப்பவர்கள் சமூக நலத் துறையின் அலுவலகம்/ துணை அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
- மேலும் அங்கு சென்று விண்ணப்பப் படிவத்தில், அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் புகைப்படம் பதித்து, அனைத்து கட்டாய ஆவணங்களின் நகல்களையும் இணைக்க வேண்டும்.
- அதையடுத்து, புதுச்சேரி பகுதியில் இருக்கும் சமூக நலத்துறை இயக்குனரகம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு துணை இயக்குனர், மற்றும்
- காரைக்கால் பகுதியில் உள்ள உதவி இயக்குனர், சமூக நலத்துறை (துணை அலுவலகம்) உள்ளிட்டவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
- சமர்ப்பித்த தேதி, நேரம் மற்றும் தனிப்பட்ட அடையாள எண் போன்ற அத்தியாவசிய விவரங்கள் ரசீதில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்