நாம் மேற்கொள்ளும் டிஜிட்டலில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18% வரி விதிக்க திட்டம் இருப்பதாகவும், இதனை வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான இறுதி கட்ட முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. GST council meeting Information
டிஜிட்டலில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18% வரி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் :
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழியாக ரூ.2,000 வரையிலான சிறிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பேமெண்ட் திரட்டிகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்க சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் பரிசீலிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த திட்டம் விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு :
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 54வது கூட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி விதிப்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 பணமதிப்பிழப்பு காரணமாக ரூ.2000 வரை நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 18% tax on digital transactions up to Rs.2000
தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது – தலைவர் விஜய் தரப்பில் பதில்!
மேலும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆன்லைன் கட்டணங்களை ஏற்றுக்கொள்ள வணிகங்களை செயல்படுத்தும் பேமெண்ட் திரட்டிகள், மத்திய மற்றும் மாநில வருவாய் அதிகாரிகளை உள்ளடக்கிய ஜிஎஸ்டி பொருத்துதல் குழு விரைவில் இந்த புதிய வரியை எதிர்கொள்ளக்கூடும் எனவே ஜிஎஸ்டிக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு எறிதலில் வெண்கலம் வென்ற ஹோகடோ செமா
ஆன்மீகச் சொற்பொழிவு சர்ச்சை பேச்சு
கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம்
தவெக மாநாடு பற்றி இரண்டு நாட்களில் முடிவு
சென்னை பெருநகரில் 1519 விநாயகர் சிலைகள்
கென்யாவில் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து