Home » செய்திகள் » புதுப்பொலிவுடன் கிண்டி சிறுவர் பூங்கா திறப்பு  – இன்று ஒரு நாள் அனுமதி இலவசம்!!

புதுப்பொலிவுடன் கிண்டி சிறுவர் பூங்கா திறப்பு  – இன்று ஒரு நாள் அனுமதி இலவசம்!!

புதுப்பொலிவுடன் கிண்டி சிறுவர் பூங்கா திறப்பு  - இன்று ஒரு நாள் அனுமதி இலவசம்!!

Breaking News: புதுப்பொலிவுடன் கிண்டி சிறுவர் பூங்கா திறப்பு: சென்னையில் இருக்கும் முக்கிய பகுதியான கிண்டியில் இயங்கி வரும் பூங்கா தான் தேசிய சிறுவர்  பூங்கா. இந்த பூங்காவில் பறவைகள், மான்கள் மற்றும் குரங்குகள் உள்ளிட்ட வன உயிரினங்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த வன விலங்குகளை பார்ப்பதற்கு என்று பார்வையாளர்கள் படையெடுப்பது வழக்கம். cm stalin

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி முதல் மூடப்பட்டு ரூ.20 கோடி செலவில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. குறிப்பாக இந்த பூங்காவில் இருக்கும் வன உயிரினங்களின் அமைவிடங்கள் காடுகளில் இருப்பது போன்ற அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி அங்கு வரும் சிறுவர்களுக்கு நூலகம், விழா அரங்கம், பார்வையாளர்களுக்கான வசதிகள் போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் வன விலங்குகளின் வாழ்வியல் முறை ‘கியூஆர் கோடு’ அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் பூங்கா உலகத் தரத்தில் புதுப்பொலிவு தற்போது பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த பூங்கா பணிகள் நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். chennai Guindy

Also Read: வயநாடு நிலச்சரிவு விவகாரம்: தமிழர்கள் 24 பேர் உயிரிழப்பு –  25 பேர் மாயம் – ஐஏஎஸ் குழு தகவல்!!

மேலும் கிண்டி பூங்காவை சுற்றி பார்க்க பார்வையாளர்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  நாளை முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பூங்காவை இலவசமாக பார்வையிடலாம் என்றும்,

5 முதல் 12 வயது உடையவர்களுக்கு பத்து ரூபாயும், பெரியவர்களுக்கு 60 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Guindy children’s park

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top