தென்னிந்திய தமிழ் சினிமாவில் கின்னஸ் சாதனை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு பெரும்பாலான நட்சத்திரங்கள் தற்போது வரை போராடி வருகின்றனர். அப்படி திரைத்துறையில் பாடகர், இசை , நடிகர் என எல்லா துறைகளிலும் கின்னஸ் சாதனை செய்த நட்சத்திரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எஸ்பிபி சுப்ரமணியம்:
தமிழ் சினிமாவில் நடிகராகவும், பாடகராகவும் கலக்கியவர் தான் எஸ்பிபி சுப்ரமணியம். இவர் 6 தேசிய விருதுகளையும், மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை வாங்கியுள்ளார். இவர் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். சொல்ல போனால் ஒரு நாளில் 13 தமிழ் பாடல்கள், 15 ஹிந்தி பாடல்கள் பாடியுள்ளார். அதனாலேயே அவருடைய பெயர் கின்னஸ் புக்கில் இடம் பெற்றுள்ளது. தற்போது அவர் நம்முடன் இல்லையென்றாலும், பாடல்கள் மூலம் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மனோரமா:
தென்னிந்திய தமிழ் காமெடி , குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மனோரமா. இவர் 1984-ல் இருக்கும் போதே ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் 5000 நாடக மேடைகளை பார்த்துள்ளார். சொல்லப்போனால் ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் 1500 படங்களுக்கு மேல் நடித்துள்ளதால் வருடைய பெயர் கின்னஸ் புக்கில் இடம் பெற்றுள்ளது
ஏ.ஆர்.ரகுமான்:
இசைப்புயல் என்று அன்போடு அழைக்கப்படும் ஏ ஆர் ரஹ்மான் கிட்டத்தட்ட 2 ஆஸ்கர் விருதுகள், 6 தேசிய விருதுகள், 11 IIFA விருதுகள்,பாப்தா, 32 பிலிம்பேர் விருதுகள், கிராமி விருதுகள் என சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் என எண்ணற்ற விருதுகளை வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் மொழிகளில் பாடிய “மா துஜே சலாம்” அசல் பாடலின் இசையமைப்பாளராக கின்னஸ் உலக சாதனை பெற்றார்.
திருமுருகன்:
மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் திருமுருகன். இந்த சீரியலை தொடர்ந்து நாதஸ்வரம் என்ற சீரியலை இயக்கி நடித்தார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்ற நிலையில் அதன் 1000 வது எபிசோடை லைவில் எடுத்து காட்டி கின்னஸ் சாதனை படைத்தார். இவர் எம் மகன், விலங்கியல் இரண்டாம் ஆண்டு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.