கணித பாடத்தில் 200க்கு 212 மதிப்பெண் எடுத்த மாணவி: பொதுவாக ஒவ்வொரு மாணவர்களும் பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று லட்சியத்தை முன்வைத்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தை சேர்ந்த ஒரு மாணவி ஒருவரின் மதிப்பெண் பட்டியல் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது குஜராத்தை சேர்ந்த வன்ஷீபன் மணீஷ் பாய் என்ற மாணவி தனியார் பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் அவருக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து அந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில் வன்ஷீபன் மணீஷ்பாய் என்ற மாணவிக்கு கணக்குப் பாடத்தில் 200 மதிப்பெண்களுக்கு 212 மதிப்பெண்கள் எடுத்திருப்பதாகவும், குஜராத்தி மொழிப்பாடத்தில் 200 மதிப்பெண்களுக்கு 211 மதிப்பெண்கள் பெற்று இருப்பதாக அச்சிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ,மாணவியின் பெற்றோர்கள் பள்ளியை தொடர்பு கொண்டனர். இதை தொடர்ந்து கணக்கீட்டில் ஏற்பட்ட சிறு தவறு காரணமாக தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த மாணவியின் புதிய மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, குஜராத்தி மொழி பாடத்தில் 200 க்கு 191 மதிப்பெண்களும், கணக்கு பாடத்தில் 200 க்கு 190 மதிப்பெண்களும் எடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.