குணா குகை எங்குள்ளது என்று பலருக்கும் தெரிந்த ஒன்றே. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த குணா குகை. சந்தான பாரதி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991ம் ஆண்டு வெளியான “குணா” படத்தில் இடம்பெற்ற “கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடலை ஒரு குகையில் வைத்து எடுத்திருப்பார்கள். அதன் பின்பு தான் அந்த குகைக்கு “குணா குகை” என்று பெயர் மாற்றப்பட்டது. அப்படி இந்த குணா குகையை பற்றி யாருக்கும் தெரியாத விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த 1821ம் ஆண்டு பிரிட்டிஷ் காலகட்டத்தில் இருந்த பி.எஸ்.வார்ட் என்ற அதிகாரியால் தான் குணா குகை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குகையில் சத்தம் கேட்டு கொண்டே இருக்குமாம். அப்போது அந்த அதிகாரி அங்கு சென்று பார்த்த போது, அங்கு யாருமே இல்லையாம். ஆனால் சமையல் செய்யும் சத்தம் மற்றும் காய்கறிகளின் மனம் வீசுமாம். இதனால் உள்ளே செல்ல எல்லோரும் பயந்தனர். மேலும் இந்த குகைக்கு பிரிட்டிஷ்காரர்கள் “சாத்தானின் சமையலறை”, அதாவது “The devil’s kitchen” என்று பெயர் வைத்தனர் என்று ஒரு பக்கம் கூறுகின்றனர். இன்னொரு பக்கம் இந்த இடம் பற்றி மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன்படி பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அந்த இடத்தில் மறைந்து தான் உணவு செய்து சாப்பிட்டார்கள் என்பதால், இந்த kitchen என்ற பெயர் வந்ததாகவும் devil என்ற பெயர் ஏன் வந்தது என்று தெரியாத ஒரு மர்மமாகவே உள்ளது என்றும் கூறுகிறார்கள். இப்படி அந்த குகையில் அமானுசமான சில விஷயங்கள் நடக்கிறது என்று பலரும் கூறி வந்தனர். இருப்பினும் இந்த குகையை மக்கள் யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. காலப்போக்கில் அந்த குகையை மறந்த நிலையில், மீண்டும் மக்களின் எண்ணங்களில் குகையை பற்றி உயிர் கொடுத்தது கமல்ஹாசனின் குணா திரைப்படம் தான். அந்த படத்திற்கு பிறகு மீண்டும் அந்த குகையை பற்றி மக்கள் பேச ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி, அந்த படத்திற்கு பிறகு அந்த குகையை “குணா குகை” என்று தமிழில் பெயர் சூட்டப்பட்டது.
அதன்பிறகு மக்கள் பலரும் அந்த இடத்திற்கு செல்ல ஆசைப்பட்டு தினசரி ஆயிரக்கணக்கானோர் சென்று வந்தனர். என்னதான் அந்த குகை கண்ணை கவரும் அளவுக்கு அழகாக இருந்தாலும், அதற்கேற்ப ஆபத்தும் அதிகம் இருக்கும். ஆமாம், இந்த குகையோட அமைப்பு அப்படி தான் இருக்குமாம். இந்த குகை கடல் மட்டத்தில் இருந்து ஆரம்பித்து கிட்டத்தட்ட 2230 மீட்டர் உயரம் வரை இருக்குமாம். அதுமட்டுமின்றி இந்த குகையில் சோலா மரங்கள், புற்கள் அதிகமாக இருக்குமாம். அதுமட்டுமின்றி மூன்று ராட்சச பாறைகளுக்கு இடுக்குக்குள் தான் இந்த குகை அமைந்துள்ளது. மேலும் அங்கு கரு கும்முனு இருட்டாக இருக்கும் இடங்களில் அளவுக்கதிகமான வௌவால்களின் கூட்டமும் சத்தமும் அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி அநத குகையில் ஆங்காங்கே குழிகளும் உள்ளன. அந்த குழி கிட்டத்தட்ட பல மீட்டர் ஆழம் கொண்டதாக காணப்படுகிறது. அதில் விழுந்தால் யாராலயும் காப்பாற்ற முடியதாம்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த குகைக்குள் ஏராளமான மக்கள் சென்று வந்தனர். அதன்படி 13 பேர் இந்த குணா குகைக்குள் நெடுந்தூரம் பயணம் செய்தனர். ஆனால் அவர்கள் உள்ளே சென்றது மட்டும் தான் சொல்லப்படுகிறது. தற்போது வரை அவர்கள் வெளியே வரவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்று புரியாத புதிராக இருக்கிறது. “சாத்தானின் சமையலறை” என்ற பெயருக்கு ஏற்ப அந்த பகுதியில் பேய்கள் இருப்பதாகவும், அங்கு வரும் மனிதர்களை கொன்று சமைத்து சாப்பிடுவதாக மக்கள் நம்ப தொடங்கினர். அதனால் அரசு அந்த பகுதியில் யாரும் செல்லக்கூடாது என்று நீண்ட கம்பிகளை வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை அந்த குகைக்குள் சுற்றி பார்க்க யாரையும் அனுமதிக்கப்படுவதில்லை. இப்படி சில வருடங்களுக்கு முன்னர் நண்பர்களுடன் சேர்ந்து அந்த குகைக்குள் சென்ற ஒருவர் குழியில் மாட்டி கொண்ட நிலையில், நண்பர்கள் சேர்ந்து அந்த நபரை காப்பாற்றுவார்கள். இதை அப்படியே தற்போது படமாக வெளியாகி தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த படம் தான் “மஞ்சுமெல் பாய்ஸ்”. இந்த படத்தின் மூலம் இப்பொழுது குணா குகை மீண்டும் பிரபலமடைய தொடங்கிவிட்டது. இதனால் குணா குகைக்கு தற்போது கூட்டம் அலைமோதுகிறது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.