என்னது…, கமலின் "குணா படம்" இந்த ஆங்கில படத்தோட ரீமேக்கா?.., இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!என்னது…, கமலின் "குணா படம்" இந்த ஆங்கில படத்தோட ரீமேக்கா?.., இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

கமலின் “குணா படம்”

தென்னிந்திய தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் ஒரு நடிகர் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் தான். தற்போது இவர் நடிப்பில் இந்தியன் 2, KH 234, KH 235 உள்ளிட்ட படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ஆனால் அவருடைய சினிமா கெரியரில் கொண்டாடிருக்க வேண்டிய படம் என்றால் அது கடந்த 1991ம் ஆண்டு வெளியான குணா திரைப்படம் தான். இந்த படம் முக்காவாசி ஷூட்டிங் கொடைக்கானலில் தான் நடைபெற்றது. குறிப்பாக “கண்மணி அன்போடு காதலன்” பாடல் அப்போது உள்ளே போகவே பயந்த சாத்தான் சமையலறை என்ற பகுதியில் தான் எடுக்கப்பட்டது. அதன் பிறகே, அந்த பகுதிக்கு குணா குகை என்று பெயர் வந்தது.

சந்தான பாரதி இயக்கிய இந்த படம் வெளியான சமயத்தில் செம்ம பிளாப் படமானது. ஆனால் இப்பொழுது இந்த படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கு காரணம் தற்போது வெளியாகி தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தான். அதில் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அப்படியே எடுத்து குணா படத்தில் இடம்பெற்ற பாடலையும் போட்டு மீண்டும் குணா படத்தை ட்ரெண்டிங் செய்து விட்டன. இந்நிலையில் குணா படத்தை பற்றி ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது குணா படம் Tie Me Up! Tie Me Down என்ற ஆங்கில படத்தின் தழுவலாம். இது யாருக்கும் தெரியாதே என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

விவாகரத்தான நபருக்கு 2ம் மனைவியாகும் சரத்குமார் மகள்.., என்னது.., 15 வயதில் மகள் இருக்கிறாரா?.., வெளியான ஷாக் தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *