
Health Tips: ஜிம்முக்கு செல்பவரா நீங்கள்: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தங்களின் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும் சில பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் போகும் அபாயங்களும் ஏற்படுகிறது. எனவே இத்தகைய சூழ்நிலையில் இருந்து உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் தப்பிக்க வேண்டும் என்று நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
ஜிம்முக்கு செல்பவரா நீங்கள்

- gymக்கு போகும் நபர்கள் முதலில் சரியான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக உங்கள் இலக்குகளுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கவும்.
- மேலும் ஒவ்வொரு தசைக் குழுவையும் வாரத்திற்கு 2-3 முறை பயிற்றுவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி cardio பயிற்சியையும் தவறாமல் செய்ய வேண்டும்.
- உடற்பயிற்சிக்கு சரியான நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் சில நேரங்களில் தவறான நுட்பத்தை யூஸ் செய்வதால் ஏற்படும் காயங்களை ஏற்படுத்தும் .
- எனவே சரியான நுட்பத்தை கற்றுக் கொள்ளுங்கள். அதையும் விட உங்களுக்கு ஏதேனும் குழப்பம் இருக்கிறது என்றால் ஒரு பயிற்சியாளரின் உதவியை நாடுங்கள்.
- உடற்பயிற்சி போது உடலில் மிகவும் வலிகள் இருக்கும் எனவே போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அதன்படி 7-8 மணி நேரம் தூங்குங்கள் அப்போது தான் உங்கள் தசைகள் வேகமாக வளர தொடங்கும்.
- மேலும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிருங்கள். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
- போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். gym exercise
Also Read: செல்வ மகள் சேமிப்பு திட்டம்: மாதந்தோறும் ரூ 1000 கட்டினால் போதும்? பெண்களுக்கான அருமையான சேமிப்பு!
- மேலும் உங்கள் இலக்கு முடிவடையும் வரை உங்களை நீங்களே ஊக்கப்படுத்தி கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி உடற்பயிற்சி செய்பவர்கள் பொறுமையாக இருப்பது அவசியம்.
- உடற்பயிற்சி செய்யும் போது உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு கொள்ளலாம்.
- மேலே குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களை கவனத்தில் கொண்டு உங்கள் ஜிம் பயணத்தை தொடங்குங்கள். health tips news in tamil
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்
டீ குடித்தால் தலைவலி நீங்குமா?