டெல்லியில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டங்களை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஹரியானா அரசு விவசாயிகள் அவர்களின் எல்லையை கடந்து செல்ல முடியாத அளவுக்கு காவல்துறை தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுத்ததும் மட்டுமின்றி, ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டி அடித்தனர். இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதற்கு முன்னர் மூன்று முறை பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது நாளை விவசாயிகளிடம் நான்காவது முறை பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. இப்படி இருக்கையில் சாம்பு எல்லை பகுதியில் கிட்டத்தட்ட பெரும்பாலான மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக் குண்டுகளை போலீஸ் வீசியுள்ளனர். அந்த சமயத்தில் 65 வயதான கியான் சிங் என்பவரும், ரயில்வே போலீஸ் படையின் அதிகாரி ஹீரா லால்(56) மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணீர் புகை குண்டுனால் தான் அவர்கள் இறந்தார் என தெரிவித்துள்ளனர்.