ஹரியானாவில் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ITI) படிப்புகளைத் தொடரும் மாணவர்களுக்கு இலவச பாஸ்போர்ட் பெற்று கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
ITI படிப்பு:
இந்திய உட்பட பல்வேறு நாடுகளில் இருக்கும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக தொடர்ந்து புது புது திட்டங்களை வகுத்து வருகிறது. மேலும் வெளிநாட்டுக்கு சென்று மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மாணவர்களுக்கு இலவச பாஸ்போர்ட் – பணம் கட்ட வேண்டாம் – அரசு அதிரடி அறிவிப்பு!
அந்த வகையில் ஹரியானா முழுவதும் இருக்கும் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ITI) படிப்புகளைத் தொடரும் மாணவர்களுக்கு இலவச பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் தகுதியைப் பெற மாணவர் ஹரியானாவில் நிரந்தரமாக வாழ்பவராக இருக்க வேண்டும். மேலும் அங்கு இருக்கும் பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் 10 ஆம் வகுப்பை முடித்திருக்க வேண்டும்.
2025 பொங்கலுக்கு ரூ. 2000 கொடுக்கும் அரசு – யாருக்கெல்லாம் தெரியுமா?
குறிப்பாக மாணவர்களுக்கு குறைந்தபட்ச வருகை 80% கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பாஸ்போர்ட்டுக்கு ஆகும் முழுச் செலவைப், அதாவது ₹1,500, அந்தந்த ஐடிஐ கல்வி நிறுவனத்தால் ஏற்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தை பெற மாணவர்கள் தங்கள் இறுதி ஐடிஐ தேர்வுக்கு குறைந்த 3 மாதங்களுக்கு முன்னரே பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்