விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்தை நிறுத்த போலீஸ் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதனால் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் மோதல் வெடிக்க தொடங்கின. இதில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டது. சமீபத்தில் கூட இளம் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விவசாயிகள் போராட்டத்தை இரண்டு நாட்கள் தள்ளி வைத்தனர். இதனை தொடர்ந்து 5ம் கட்ட பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தற்போது அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது போராட்டக்காரர்களால் அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டு இருந்தால், போராட்டகாரர்களின் தனிப்பட்ட சொத்து மற்றும் அவர்களின் வங்கிக் கணக்குகளை பறிமுதல் செய்து ஈடுசெய்யப்படும். எனவே சேதம் ஏற்பட்ட யாராக இருந்தாலும், ஏன் சாமானிய மக்களாக இருந்தாலும் சரி புகார் தெரிவிக்கலாம். மேலும் இந்த போராட்டத்தை வழிநடத்தி செல்லும் விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் (NSA) 1980-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹரியானா காவல்துறை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.