தற்போது மதுரையில் இரண்டு நுழைவுவாயில்களை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசு விரும்பினால் சாலையின் இரு ஓரங்களையும் இணைக்கும் வகையில் பெரிய நுழைவு வாயில்களை அமைத்துக்கொள்ளலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரையில் இரண்டு நுழைவுவாயில்களை இடிக்க உத்தரவு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தோரண நுழைவு வாயில் வழக்கு :
தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி என்பவர் போக்குவரத்து தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் அவர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் தோரண நுழைவு வாயில் எனும் பெயரில் பழமையான அலங்கார வளைவு கட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றன.
மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் காரணமாக இருப்பதாகவும் வழக்கு தொடரப்பட்டது.
தோரண நுழைவு வாயில்களை இடிக்க உத்தரவு :
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
அந்த வகையில் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து தற்போது சாலைகளை அகலப்படுத்தும் போது இதுபோன்ற போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் அலங்கார வளைவுகளை அகற்ற வேண்டும்.
அந்த வகையில் மதுரையில் மாட்டுத்தாவணி எதிரே உள்ள நுழைவாயில் மற்றும் கே.கே.நகர் நுழைவாயில் இரண்டையும் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி – TNSTC வெளியிட்ட குட் நியூஸ்!
நீதிபதிகள் கருத்து :
அத்துடன் நுழைவு வாயிலின் தூண்களுக்கு பின் உள்ள பகுதியை பலர் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி வருவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனை அகற்ற எந்த வித ஆய்வும் தேவையில்லை.
அரசு விரும்பினால் சாலையின் இரு ஓரங்களையும் இணைக்கும் வகையில் பெரிய நுழைவு வாயில்களை அமைத்துக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.