Breaking News: HDFC வாடிக்கையாளர் உஷார்: இந்தியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றாக இருந்து வருவது HDFC வங்கி. எச்டிஎஃப்சி வங்கிக்கு நாடு முழுவதும் 93 மில்லியன் தனிநபர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் எச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அதாவது வங்கியின் செயல்திறன் வேகத்தை மேம்படுத்தவும் விதமாகவும் ஒட்டுமொத்த வங்கி அமைப்பையும் (CBS) புதிதாக வடிவமைக்கப்பட்ட தளத்திற்கு மாற்ற HDFC வங்கி முடிவு செய்துள்ளது. இதனால் வருகிற ஜூலை 13ம் தேதி , சிஸ்டமை அப்டேட் செய்ய இருக்கின்றனர். அப்படி அப்டேட் செய்யும் நேரத்தில் எச்டிஎஃப்சி வங்கியின் சேவைகள் 14 மணி நேரத்திற்கு முடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
Also Read: கல்யாணத்துக்கு NO சொன்ன காதலன் – பிறப்புறுப்பை அறுத்து எடுத்த மருத்துவ காதலி – வீடியோ வைரல்!
குறிப்பாக இரண்டாவது சனிக்கிழமை அன்று, வங்கி விடுமுறை நாள் அன்று வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக தான் இந்த மேம்படுத்தலை வங்கி திட்டமிட்டுள்ளது. எனவே வங்கி தொடர்பான நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது என்று வங்கி தெரிவித்துள்ளது. HDFC வாடிக்கையாளர் உஷார்