health insurance – மருத்துவ காப்பிட்டு திட்டம்: நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இப்படி இருக்கையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு திட்டங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி 70 வயதுக்கு மேல் இருக்கும் முதியவர்களுக்கான மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சமூக – பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, நாட்டில் இருக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எல்லோருக்கும், வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமல் இந்த காப்பீட்டு திட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
health insurance – மருத்துவ காப்பிட்டு திட்டம்
எனவே இந்த திட்டத்தால் 4.5 கோடி குடும்பங்களில் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. மேலும் ஏற்கனவே காப்பீடு வசதி வைத்திருக்கும் மக்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் இருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Also Read: சிவன் பக்தர்கள் கவனத்திற்கு – சதுரகிரி கோவிலில் அடுத்த 4 நாட்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி!
அதுமட்டுமின்றி ஊழியர்களின் மாநில காப்பீட்டு திட்டங்கள் மற்றும் தனியார் காப்பீட்டு திட்டங்களில் பயன் பெறும் மூத்த குடிமக்களும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்
ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை
ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்
TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்