சமீப காலமாக மாரடைப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 30 வயதுக்கு கீழ் இருக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு தான் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால் ஒரு ஆளுக்கு மாரடைப்பு ஏற்படுவதை முன்பே கணிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?, ஆமாம், சில விஷயங்களை வைத்து மாரடைப்பு எப்போது வர போகிறது என்று தெரிந்து, அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு நெஞ்சு வலி ஏற்படாமல் தப்பிக்கலாம். அதற்கான அறிகுறிகள் தெரிந்தாலே நம்மால் அதிலிருந்து விடுபட முடியும். பொதுவாக மார்பு வலி, கைகள், முதுகு மற்றும் கழுத்தில் உள்ள அசௌகரியம் மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை தான் மாரடைப்புகளின் பொதுவான அறிகுறிகளாகும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அறிகுறிகள்:
அதிக வியர்வை, தலைசுற்றல், முடி உதிர்தல், தூக்கமின்மை, அடி வயிற்று வலி, பலவீனம், குமட்டல், சோர்வு, மூச்சுத்திணறல், மயக்கம், கால், பாதம் மட்டும் முழங்கால் வீங்கி போதல், மார்பகத்தில் ஓர் அசௌகரிய உணர்வு, சீரான இதய துடிப்பின்மை.
மனிதனுக்கு ஏன் ஏற்படுகிறது?
வயது, கொலஸ்ட்ரால் அளவு உயர்வு, புகைபிடித்தல், மது அருந்துதல், இரத்த அழுத்தம் உயர்வு, உடல் பருமன் அதிகரிப்பு, நீரிழிவு, அதிக அளவு மன அழுத்தம், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுதல் உள்ளிட்ட செயல்கள் தான் ஒரு மனிதனுக்கு ஈசியாக மாரடைப்பு ஏற்படுகிறது.
மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.., முன்னாள் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு – வெளியான ஷாக்கிங் நியூஸ்!!
தடுப்பது எப்படி:
- இதய ஆரோக்கியமான உணவு
- ஆரோக்கியமான எடையை பராமரித்தல்
- தவறாமல் உடற்பயிற்சி செய்தல்
இதன் மூலம் மாரடைப்பு வருவதை தடுக்கலாம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.