மக்களே உஷார் – வெப்ப அலை வீசும்: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக நேற்று பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக கிட்டத்தட்ட 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்தது. இதில், அதிகபட்சமாக சேலத்தில் 108 டிகிரியும், ஈரோட்டில் 107 டிகிரியும், மதுரை, தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருத்தணி, கோவை, நெல்லை, தஞ்சாவூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இன்று முதல் வரும் 27-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கக் கூடும். மேலும், வட தமிழ்நாடு மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும். எனவே நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று நாமக்கல், சேலம், வேலூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.