
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தற்போது சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 296ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதுமட்டுமின்றி இன்று முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை அதாவது அடுத்த ஐந்து நாட்களில் தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். எனவே இன்று முதல் 30.04.2024 வரை அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.