தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான “ஆரஞ்சு அலர்ட்”
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான “ஆரஞ்சு அலர்ட்”: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்ப நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் பெரம்பலூர், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் மற்றும் ஈரோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் வேலூர், சேலம், திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மதுரை, விருதுநகர், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.