தமிழ்நாட்டில் வரும் ஜூன் 2ஆம் தேதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும். தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வரலாறு காணாத வெப்ப அலை வீசியது அதன் பிறகு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கோடை மழை பெய்து வெப்பத்தின் தாக்கம் சற்று தணித்தது. மீண்டும் கடந்த சில நாட்களாக மீண்டும் வெப்பதின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் ஜூன் 2ந்தேதி முதல் வெப்பதின் தாக்கம் சற்று குறையும் என தனியார் வானிலை மைய வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 2ஆம் தேதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும் :
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில், இதனை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக கேரளாவின் பல பகுகிதளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் பருவமழையும் தொடங்கியுள்ள காரணத்தால் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொல்லம், பத்தனம் திட்டா , ஆலப்புழா , கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் போன்ற மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ! 57 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பார்வையாளர் நியமனம் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
இந்த சூழ்நிலையில் தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வருகிற ஜூன் 2ஆம் தேதி முதல் கோடை வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்று தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் வட தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.