
மாணவர்களுக்கு குட் நியூஸ் – இன்று முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை: நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக நாளுக்கு நாள் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் கொளுத்தி வருகிறது. மேலும் இன்று முதல் வெப்ப அலை இருந்து வருவதால் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இதனை தொடர்ந்து தற்போது திரிபுரா மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு திரிபுரா மாநிலத்தில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, இன்று (ஏப்ரல் 24) முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக திரிபுரா அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வெளியே சென்று வரும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, நிழற்குடைகள் உள்ளிட்ட தேவையான ஏற்பாடுகளை வருவாய்த்துறை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.