வெப்ப அலை எதிரொலி - 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!வெப்ப அலை எதிரொலி - 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

வெப்ப அலை எதிரொலி – 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் சென்னை வானிலை மையம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடுவதன் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலை எதிரொலி – 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

மேலும் குறிப்பாக வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய 15 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மாணவர்களுக்கு குட் நியூஸ் – இன்று முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை – திரிபுரா அரசு அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *