
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில், அடுத்ததாக வடகிழக்கு பருவமழை ஆரம்பமாக இருக்கிறது. weather report news
இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.
Also Read: அனில் அம்பானி ஜெய் அன்மோலுக்கு 1 கோடி அபராதம் – செபி அதிரடி உத்தரவு!
இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை கொட்டி தீர்க்கும். மேலும் திருப்பத்தூர், காஞ்சி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட ௭ மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்
சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்
இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் – அரசு போட்ட அதிரடி உத்தரவு!