Breaking News: தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது
குறிப்பாக தமிழகத்தின் முக்கிய மாவட்டமான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது.
அதே போல் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Also Read: வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல் – பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்!!
மேலும் அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு
வயநாடு நிலச்சரிவு: இறந்த மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த அப்பா
சென்னை புறநகர் ரயில்கள் திடீர் ரத்து